பாஜக பிரமுகர் ஒருவர் தனது காருக்கு தானே தீ வைத்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது. இந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது சதீஷ்குமாரே காருக்கு தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தபோது காரைவிற்று நகை வாங்கித் தரும்படி மனைவி தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்த காவல்துறையினர் அவருக்கு போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.