Home » Entries posted by admin (Page 6)
Entries posted by admin

இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

Comments Off on இட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கி – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டேட் வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் […]

Continue reading …

இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா – 26ஆம் தேதி கொல்கத்தாவில் துவக்கம் !

Comments Off on இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா – 26ஆம் தேதி கொல்கத்தாவில் துவக்கம் !

டிசம்பர் 16, 2021, வங்கதேசத்தின் விடுதலை மற்றும் 1971-ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி ஆகியவற்றின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் தினமாகும். இந்திய வரலாற்றில் இந்த பிரசித்தி பெற்ற நிகழ்வைப் போற்றும் வகையில் பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. போரின்போது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவிய கலாச்சார இணைப்பை எடுத்துரைப்பதற்காக வெற்றி கலாச்சார திருவிழாவை கொல்கத்தாவில் செப்டம்பர் 26-29 நடத்த இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம்  திட்டமிட்டுள்ளது. திரைப்படங்கள், நாடகங்கள், இசை […]

Continue reading …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல் !

Comments Off on சென்னை விமான நிலையத்தில் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் தங்கம் பறிமுதல் !

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த போது, அவரது உடலில் தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை […]

Continue reading …

திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Comments Off on திருச்சி நாகமங்கலத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய ஊட்டச்சத்து மாதம், சுதந்திர இந்தியாவின் வைரவிழா, கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, திருச்சிராப்பள்ளியில் உள்ள நாகமங்கலம் சமுதாய அரங்கில், திருச்சி களவிளம்பரத்துறை அலுவலகம் நடத்தியது.  மணிகண்டம் பஞ்சாயத்துத் தலைவர் கமலம் கருப்பையா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.  நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். திருச்சி களவிளம்பரத்துறை அதிகாரி தேவி பத்மநாபன், துவக்க உரையாற்றினார்.  ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அவர் கூறினார்.  ஊட்டச்சத்துத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் […]

Continue reading …

கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

Comments Off on கோவளம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ்!

கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரமாக, தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், “கோவளம் மற்றும் ஈடன் கடற்கரைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலமும், 2020-இல் அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் மறுசான்றினாலும் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன என்று […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

Comments Off on கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர […]

Continue reading …

புலிக்கொடியேற்றிவைத்த சீமான்!

Comments Off on புலிக்கொடியேற்றிவைத்த சீமான்!

அம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான். 19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூர் குழந்தை இயேசு ஆலையம் அருகில் தமிழ்த்தேசியப் போராளி வ.கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வெட்டுக்களைத் திறந்து […]

Continue reading …

கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

Comments Off on கோவிட் தடுப்பூசி: 80 கோடியைத் கடந்து சாதனை !

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 80 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,42,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 79,15,457 முகாம்களில் 80,43,72,331 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,71,167 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.68 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து […]

Continue reading …

நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

Comments Off on நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள், இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue reading …

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

Comments Off on நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

நெல் விளைச்சல் அதிகமுள்ள மாவட்டங்களில் செயல்பட்டு வந்த பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விவசாயிகளின் நலன் கருதி அவற்றை காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் திறக்க வேண்டும் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை: ஏற்கெனவே எனது அறிக்கையில் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் ஏரிப் பாசனம் மூலம் நெல் பயிரிட்ட மாவட்டங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திமுக […]

Continue reading …