Home » Entries posted by Shankar U (Page 602)
Entries posted by Shankar

மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Comments Off on மீண்டும் பிரதமரான ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார். மீண்டும் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல நாட்டின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருடைய வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில்; நியூசிலாந்து பிரதமர் தேர்தலில் இரண்டாவது முறை மகத்தான வெற்றிக்கு ஜெசிந்தா […]

Continue reading …

நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள் – கமலா ஹாரிஸ்!

Comments Off on நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள் – கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். பின்பு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது […]

Continue reading …

அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி – மாணவர்கள் அசத்தல்!

Comments Off on அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி – மாணவர்கள் அசத்தல்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இதில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். 57 ஆயிரத்து 715 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதில் அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மற்றும் அரசு உதவி பள்ளியில் படித்த 877 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 6,692 பேர் தேர்வு எழுதியதில் […]

Continue reading …

நியூசிலாந்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெசிந்தா ஆர்டன் பிரதமரானார்!

Comments Off on நியூசிலாந்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெசிந்தா ஆர்டன் பிரதமரானார்!

நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார். இதை பற்றி கூறிய ஜெசிந்தா ஆர்டன்; அடுத்து வரும் மூன்று வருடத்திற்கு அதிகமான வேலைகள் உள்ளது. கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். மேலும், ஜெசிந்தாவுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue reading …

பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

Comments Off on பிரேசில் நாட்டை உலுக்கி எடுக்கும் கொரோனா!

பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனாவால் 51 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை […]

Continue reading …

ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

Comments Off on ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ நிறுவப்பட்டு 75 ஆவது வருடத்தை உணர்த்தும் அடிப்படையிலும் மற்றும் இந்த அமைப்பின் நீண்டகால தொடர்பை உணர்த்தும் அடிப்படையிலும் பிரதமர் மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய எட்டு பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்பு மத்திய […]

Continue reading …

இந்தியாவுக்காக முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி உயிரிழந்தார்!

Comments Off on இந்தியாவுக்காக முதல் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி உயிரிழந்தார்!

இந்தியாவுக்காக முதல் முதலில் ஆஸ்கார் விருதை வென்ற பெண்மணி பானு அதய்யா உடல்நலக்குறைவால் 91 வயதில் நேற்று மும்பையில் உயிரிழந்தார். இதைப் பற்றி அவருடைய மகள் கூறியது; மூன்று வருடத்துக்கு முன்பு என் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருடைய காலத்தை படுக்கையிலேயே கழித்து வந்தார். நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரின் இறுதி சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சந்தனவதி மைதானத்தில் நடந்தது என்றார். மேலும், 1950 ஆம் ஆண்டு இந்தி திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராக […]

Continue reading …

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் வீரத்தை போற்றுவோம் – இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை!

Comments Off on மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் வீரத்தை போற்றுவோம் – இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை!

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நினைவு நாளில் பல தலைவர்கள் பிரமுகர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி […]

Continue reading …

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; 101 பேர் கைது!

Comments Off on பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு; 101 பேர் கைது!

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்தி வழக்கில் இதுவரை 101 பேரை கைது சிபிசிஐடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தால் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டில் விவசாயிகள் இல்லாத பலர் போலியாக அட்டைகளை இணைத்தாகவும் மற்றும் 6 லட்சம் பேர் வரை இணைக்கப்பட்டதாகவும் […]

Continue reading …

எங்களை பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கை துரோகி – விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

Comments Off on எங்களை பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கை துரோகி – விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளனர். அந்த படத்திற்கு “800” என பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்சேதுபதி நடித்ததற்கு பெரும் அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தற்போது இயக்குனர் பாரதிராஜா இதை பற்றி விஜய்சேதுபதிக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அந்த கடிதத்தில், அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது. வணக்கம் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் […]

Continue reading …