Home » Entries posted by Shankar U (Page 628)
Entries posted by Shankar

இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

Comments Off on இன்று உடன் சென்னைக்கு 381 வயது; வந்தோரை வாழ வைக்கும் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!

இன்று உடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 381 வயதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை.. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Continue reading …

கேல் ரத்னா விருது பெற போகும் மாரியப்பன் தங்கவேலுக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பாராட்டு!

Comments Off on கேல் ரத்னா விருது பெற போகும் மாரியப்பன் தங்கவேலுக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பாராட்டு!

கேல் ரத்னா விருது பெறும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் கூறியது; விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ல் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கும், அவர்தம் […]

Continue reading …

மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்!

Comments Off on மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்!

நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில்; “வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழதுள்ளியோடும் தொடர்ந்த வினைகளே”. வினைதீர்க்கும் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது #விநாயகர்சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் இல்லந்தோறும் இன்பங்கள் நிறையட்டும்! மேலும், மக்களுக்காக முதல்வர்,ஆளுநர் ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Continue reading …

அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி!

Comments Off on அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி!

வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து குறிப்பில்; வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை பகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். “விநாயகனே வெவ்வினையை வெறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனேவிண்ணிற்கும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,995 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,995 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 101 பேர் பலியாகியுள்ளனர், 5,764 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,67,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,340 பேர் பலியாகியுள்ளனர், 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,22,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல்ரத்னா விருது – மத்திய அறிவிப்பு!

Comments Off on தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல்ரத்னா விருது – மத்திய அறிவிப்பு!

2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று இந்தியாவுக்கு மிக பெருமை சேர்த்தற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என மத்திய அரசு அறிவிப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு. மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகட்டுக்கும் கேல் ரத்னா விருது அறிவிப்பு. ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல்ரத்னா விருது. இஷாந்த் […]

Continue reading …

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பதிவு!

Comments Off on அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் பதிவு!

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய பதிவில்; ஆனை முகம், குழந்தை சிரிப்பு. எல்லோருக்கும். எல்லா காலத்திலும் இயன்றதை வைத்து வணங்க முடிந்த கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர். மஞ்சளிலும் பிடிக்கலாம். சாணியில் பிடிக்கலாம் சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கு மாலை சார்த்தலாம், அருகம்புல் போடலாம். இப்படி நியமம், கடுமையான விதிகள் என்று பக்தர்களை […]

Continue reading …

2023ஆம் ஆண்டின் உலகக் கோப்பை உடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

Comments Off on 2023ஆம் ஆண்டின் உலகக் கோப்பை உடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ஒரு பேட்டியில் ஆரோன் கூறியது; இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்து இருக்கிறேன். அது என்னுடைய லட்சியம். அந்த வருடத்துடன் எனக்கு 36 வயது ஆகிறது. அதுவரை உடல் தகுதி சிறப்பாக விளையாட ஒத்துழைக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 10 […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,986 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 116 பேர் பலியாகியுள்ளனர், 5,742 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,61,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,239 பேர் பலியாகியுள்ளனர், 3,01,913 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,21,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்வீட்!

Comments Off on எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்வீட்!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைந்து வரவேண்டும் என உலகமே கடவுளிடம் பிராத்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அவரின் ட்விட்டரில் பக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியதுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்; நீங்கள் மிகவும் […]

Continue reading …