உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் சென்னையில் தான் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 12 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Continue reading …கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் முக்கிய அறிவிப்புக சிலவற்றை வெளியிட்டார். […]
Continue reading …விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் முன்பகை காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொலை செய்தனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோர்களுக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார். மேலும் மாணவி ஜெயஸ்ரீயின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவருடைய அஞ்சலி செலுத்தினார் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தங்களுடைய […]
Continue reading …வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியது; உலகையே அச்சுறுத்தி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் இதனால் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் அவர்களே பெறுப்பை ஏற்க்க வேண்டும். ஏனேனில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் […]
Continue reading …விளையாட்டு துறையில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கப்படும். இந்நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருந்து ஷிகா பாண்டே மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஆல்-ரவுண்டராக விளையாடுகிறார்கள். இதன் மூலம் பிசிசிஐ இவர்கள் இருவர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை […]
Continue reading …இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை சீராக்க ரூபாய்.20 லட்சத்திற்கான புதிய திட்டத்தை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டு பேசிவருகிறார். இந்த திட்டதை பல்வேறு தரப்பினரோடு கலந்து ஆலோசித்து தான் இந்த பொருளாதார தொகுப்பை உருவாகியுள்ளது. மேலும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்க அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளச்சியை உண்டாகும் வகையில் “சுயசார்பு பாரதம்” என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஜன்தன், ஆதார் மூலம், […]
Continue reading …பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் ஜெர்ரி ஸ்டில்லர், ஹாலிவுட்டில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர் மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். நாஸ்டி கேப்பிட்டல், லவ்வர்ஸ் அண் தி அதர் ஸ்டேரஞ்சர்ஸ், மை 5 வைவ்ஸ், ஏர்போர்ட் 1975 போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இதுபோக தி குட் வைப் , மெர்ஸி உள்ளிட்ட வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். சில நாட்களாகவே ஸ்டில்லர், உடல் நல குறைவால் அவதிபட்டு வந்தார். […]
Continue reading …சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் ! திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை சேர்ந்த பிரசன்னா நேற்று இரவு தனது சமூகவலைத்தள பக்கமான ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார், அதில் பல்வேறு நடவடிக்கைகள் அடுத்த […]
Continue reading …சென்னை,மே 11 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி. ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (10-05-2020) அவரது இல்லத்தில் வழங்கினார்.
Continue reading …சென்னை,மே 11 நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கொதிகலன் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளர் உயிரிழந்திருக்கிறார். இவரையும் சேர்த்து இதுவரை இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், படுகாயமடைந்த தொழிலாளர்களில் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையம் அம்மேரி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 210 மெகாவாட் திறன் கொண்ட அதன் ஆறாவது அலகில் கடந்த […]
Continue reading …