Home » Archives by category » தமிழகம் (Page 313)

நாகூர் அருகே இளைஞர் கொலை !

Comments Off on நாகூர் அருகே இளைஞர் கொலை !
நாகூர் அருகே இளைஞர் கொலை !

நாகை, ஜூலை 8 நாகை மாவட்டம் பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு பின்புறம் உள்ள திடலில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நாகூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டபோது, மேல வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் என்பவருடைய மகன் அசாருதீன் (19) என்ற இளைஞர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தபட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து […]

Continue reading …

எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

Comments Off on எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?
எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

திருச்சி, ஜூலை 8 எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா? அறம் மக்கள் நல சங்கம் இயக்கம் தலைவர் ராஜா இவர் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் இணைந்து, முதல் முதலாக எல்பின் என்று பெயரிலும் இப்போது அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் கூறி ரியல் எஸ்டேட், எம்.எல்.எம், பணம் இரட்டிப்பு, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரை […]

Continue reading …

கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கொரோனா வைரஸை அழிப்பதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு மிக அவசியமானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூபாய் 127 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஆய்வு செய்தார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோர் இருந்தனர். அந்த சமயத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் கூறியது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான […]

Continue reading …

தமிழ் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உயிரிழந்தார்!

Comments Off on தமிழ் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உயிரிழந்தார்!

தமிழில் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் பாரதிதாசன். இவருடைய மகன் மன்னர் மன்னன் அவருடைய 92வது வயதில் இன்று உயிரிழந்தார். புதுச்சேரியில் உள்ள மன்னர் மன்னன் ஒரு தமிழறிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய வரலாற்றை எழுதியவர். தமிழ்மொழியில் பெருமை மிக்க பல நூல்களை எழுதியவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரராவார். இவருடைய பொண்ணான சேவையைப் பாராட்டி தமிழக அரசு திருவிக விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகளை கொடுத்துள்ளது. வயது மூப்பின் காரணத்தினால் இன்று உயிரிழந்தார். அவருடைய […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – குணம் அடைபவர்கள் அதிகரிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – குணம் அடைபவர்கள் அதிகரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,793 பேர் குணமடைந்துள்ளனர். பின்னர் சென்னையில் 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,14,978 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,571 பேர் உயிரிழந்துள்ளனர், 66,571 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 70,017பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,082 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், குணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் இலவச ரேஷன் அரிசி கொடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.

Continue reading …

#BREAKING: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று!

Comments Off on #BREAKING: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று!

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் உயிரிழப்பு, 2,186 பேர் குணம் அடைந்துள்ளனர். மற்றும் சென்னையில் 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இது வரை 1,11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 62,778 பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இதுவரை 68,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1054 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த பலியான 60 பேரில் 21 பேர் சென்னையில் பலியானவர்கள்.

Continue reading …

அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அம்மன் அர்ஜுனனின் மகள் குடும்பத்தினரோடு மதுரை சென்று திரும்பி உள்ளனர். இதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எம்எல்ஏவின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏ மற்றும் மற்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் […]

Continue reading …

#BREAKING: மதுரையில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் உத்தரவு!

Comments Off on #BREAKING: மதுரையில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பரவை போருராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 6ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. அவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மூன்று ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …