அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் டொமினிக் தீம்!

Filed under: விளையாட்டு |

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஆகிய இருவரும் மோதினார்.

முதல் செட்டை 6-2 என்கிற கணக்கில் ஸ்வெரேவ் கைப்பற்றினார். அடுத்த இரண்டாவது செட்டை 6-4 கணக்கில் ஸ்வெரேவ் மீண்டும் கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய டொமினிக் தீம் 6-4 என்கிற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த நான்காவது செட்டை 6-3 கணக்கில் டொமினிக் தீம் மீண்டும் கைப்பற்றினார்.

இறுதியில் பரபரப்பான ஆட்டமாக மாறியது. ஐந்தாவது செட்டை டொமினிக் தீம் ஆக்ரோஷமாக விளையாடி 7-6 என்கிற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என செட்களை கைப்பற்றி ஆண்களுக்கான ஒற்றையர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை டொமினிக் தீம் வென்றார்.