நிதி காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் கட்டாயமாக நடைபெறும் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஆரம்பித்து இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனைப்பற்றி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் கூறியது: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கட்டாயமாக நடைபெறும். ஏனென்றால் மீண்டும் கிரிக்கெட் தூங்குவதற்கும் மற்றும் நிதியை சமாளிப்பதற்கும் இந்த போட்டி நடைபெறுவது அவசியம்.
போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகளை பளபளப்பாக்க எச்சில்களை பயன்படுத்தக்கூடாது என ஐசிசி தெரிவித்தது. இதற்கு மாற்றாக வேறு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என நம்புகிறேன். கொரோனா வைரஸ் விரைவில் கட்டுக்குள் வரும் என நினைக்கிறேன்.
இவ்வாறு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியுள்ளார்.