மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முதல்வர் முன்மாதிரி – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

Filed under: சென்னை,தமிழகம் |
சென்னை : பேரிடர் காலங்களில் மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக செயல்பட்டு வருபவர் நம் தமிழக முதல்வர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்தோடு விளக்கம்.
 
 
இந்த  அசாதாரண  சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்காளிப்பாக 100 ரூபாயிலிருந்து   நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்கி தந்த பண்பாளர் நம்முடைய முதலமைச்சர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார்.
 
கொரோனா நிவாரண நிதிக்காக தாம் சேமித்து வைத்திருந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து இந்த சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கமும், நாட்டிற்கு உதவும் எண்ணமும் கொண்ட உயர்திரு.விசாக் என்ற தம்பிக்கு தனது அன்பார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் அவரது பெற்றோர்கள் மூலமாக தெரிவித்தது ஒட்டுமொத்த பொது மக்களுக்கும் உதவி செய்கின்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் தமிழக முதலமைச்சரின் செயல்பாடு அமைந்திருந்தை அனைவரும் அறிவார்கள். ஆனால், இந்த நிலையிலும் சுயநலத்தோடு தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்ற நபர்கள் அரசு வழங்கி வருகின்ற பாதுகாப்பான நடவடிக்கைகள், சிறப்பான நடவடிக்கைகள், நல்ல நடவடிக்கைகளை பாராட்ட மனமில்லை என்றாலும், மக்களை குழப்புகின்ற வீண் வதந்திகளை பரப்புவது உண்மையாக உதவி வருகின்ற உள்ளங்களுக்கு வருத்தம் அளிப்பதாக அமைந்துள்ளது.
 
இப்பேரிடர் ஆரம்ப நிலையிலேயே கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 12 கண்காணிப்பு குழுக்களோடு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஊக்கு விப்பதற்காகவும் ஒருங்கிணைப்பதற்காகவும் தனிக்குழுவை அமைத்து 2,500 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 58,000 தன்னார்வலர்களுக்கு சமூக இடைவெளி, சமூக பாதுகாப்பு வழி முறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்த்திட உறவுப்பாலம் அமைத்துக் கொடுத்து முன் உதாரணமாக செயல்படுபவர் நம்முடைய தமிழக முதலமைச்சர் எடப்பாடியார்.
 
சுனாமி, நிலநடுக்கம், பெருவெள்ளம், நிலச்சரிவு, வர்தா, ஒக்கி, கஜா போன்ற இயற்கை மனித பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணகளை வழங்கி ஒட்டு மொத்த பாராட்டுகளை பெற்ற பண்பாளர்களை போல், இந்த கொரோனா கோவிட் – 19 வைரஸ் தொற்று உலகப் பேரிடரில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவ முன் வருகின்ற பண்பாளர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது என்பதனை கவனத்தில் கொண்டு  “சேவை செய்வோர்களையும்  –  சேவை  பெறுபவர்களையும்” ஒட்டுமொத்தமாக காப்பாற்றுவது அரசின் தலையாய கடமையாக கொண்டு அனுபவம் வாய்ந்த உயர் மருத்துவ குழுவினர் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் தான் உரிய வழிமுறைகளை கடைபிடியுங்கள் என்று மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களுக்கு உரிய அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்து சுயநலம் இல்லா மனித நேய பண்பாளர்களை ஊக்குவித்து வருபவர் நம்முடைய
தமிழக முதலமைச்சர் பாசமிகு அண்ணண் எடப்பாடியார்.
 
ஆனால், இதை உள்நோக்கத்தோடு சமூக வளைதளங்களில் தவறான புரிதல்களை பொது மக்களிடம் கொண்டு செல்வது மனித சமூதாயத்திற்கு செய்யும் மாபெரும் பிழையாகும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு குடும்பத்தினைரையும் பாதுகாப்பது தான் என் தலையாய பணி என்று இரவு பகல் பாராது, ஊன் உறக்கம் பாராது களத்திலே சூறாவளியாக சுழன்று அயராது  பாடுபட்டு நம் தாய் தமிழ்நாட்டு மக்களை அரண் அமைத்து பாதுகாத்து வருபவர் மாண்புமிகு அம்மாவின் மாணவர், நமது தமிழக முதலமைச்சர் பாசமிகு அண்ணண் எடப்பாடியார் அவர்களின் இந்த தூய பணிக்கு நாம் ஒவ்வொருவரும் கருத்து வேறுபாடின்றி மனித குலத்தை காப்போம் என்ற ஒரே கருத்தோடு துணை நின்று தோள் கொடுப்போம். நடைபெற்று வருகின்ற தியாக வரலாற்றில் நாமும் இடம் பெற இத்தமிழ் புத்தாண்டு தினத்தில் உறுதி ஏற்போம்.  “விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு” என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து கொரோனா வைரஸ் கோவிட் – 19 தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாப்போம். இது மனித குலத்திற்கு நாம் செய்யும் மகத்தான சேவையாகும்.
 
ஆர்.பி. உதயகுமார்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.