
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு […]
Continue reading …
பா.ரஞ்சித்தின் உதவியாளரான விடுதலை சிகப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விடுதலை சிகப்பி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர் சீதை லட்சுமணன் அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பு மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட […]
Continue reading …
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பிரபாஸ் நடிப்பில் தயாராகிய “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. இதிகாச திரைப்படமான “ஆதிபுருஷ்”ல் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் அனிமேஷன் படமான இதன் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் படத்தின் […]
Continue reading …
நாளை நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. பாஜக அரை லிட்டர் பால் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் கொடுத்தது. கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பிரியங்கா காந்தி அங்கும் சில இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளார். […]
Continue reading …
கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பதவிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க […]
Continue reading …
இன்று அமைச்சர் துரைமுருகன் திடீரென ஆளுனர் ரவியை நேரில் பார்க்க செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ரவியை கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் விவாதம் செய்யட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட […]
Continue reading …
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய […]
Continue reading …
இன்று காலை வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவர் மகன் தேவா (17 வயது) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை சரியாக […]
Continue reading …
“ஸ்பைடர்மேன்” திரைப்படத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே டப்பிங் பேச சென்றது வைரலாகியுள்ளது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினியின் “லால் சலாம்” திரைப்படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகியுள்ள படம் “லால் சலாம்”. நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் ரஜினிகாந்த் தோன்றுகிறார். ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என பலரும் பல்வேறு யூகங்களை வைத்த நிலையில் நேற்று ரஜினிகாந்தின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. படத்தில் மொய்தீன் பாய் […]
Continue reading …