Home » Entries posted by Shankar U (Page 645)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,538 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,538 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 79 பேர் பலியாகியுள்ளனர், 3,391 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை பேர் 1,60,907 பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர், 1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில்  3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை – ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

Comments Off on இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை – ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இருக்கும் Monash பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் செயல்பாட்டை கொண்டு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை கண்டுபிடித்துள்ளனர். ஒரு துளி ரத்தத்தை வைத்து செய்யப்படும் இந்த பரிசோதனை மூலம், யாருக்காவது கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதனை மட்டுமில்லாமல், முன்பு அந்த நபர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நபரா என்பது பற்றியும் […]

Continue reading …

தியேட்டர், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Comments Off on தியேட்டர், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு!

கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் தாக்கத்தினால் தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தியேட்டர், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை தற்போது திறப்பதற்கும் மற்றும் தளர்வு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பொது மக்கள் அதிகமாக செல்லும் இடங்களுக்கு தளர்வு செய்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது […]

Continue reading …

இந்த இயக்குனர் படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக அறிமுகம்!

Comments Off on இந்த இயக்குனர் படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக அறிமுகம்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் கொண்டிருக்கும் படம் ஜோஷ்வா : இமைபோல் காக்க. இந்த படத்தில் வருண், ராஹி உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல் “நான் உன் ஜோஸ்வா” என்கிற பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் மூலம் நடிகர் கிருஷ்ணா இப்படத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் கிருஷ்ணா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,549 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 5,106 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,56,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,236 பேர் பலியாகியுள்ளனர், 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் – பிரதமர் ட்விட்டரில் பெருமிதம்!

Comments Off on திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் – பிரதமர் ட்விட்டரில் பெருமிதம்!

பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டரில் பக்கத்தில் திருக்குறளையும் மற்றும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

Continue reading …

அசாம் மாநிலத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் 68 பேர் உயிரிழப்பு – இத்தனை பேர் பாதிப்பா!

Comments Off on அசாம் மாநிலத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் 68 பேர் உயிரிழப்பு – இத்தனை பேர் பாதிப்பா!

அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்யும் கனமழையால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 30 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும், இதில் 48 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் ஜோர்ஹாட், திப்ருகார், தின்சுகியா போன்ற சில மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ள பெருக்கல் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் […]

Continue reading …

இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தினால் 6,471 பே​ர் பயன் அடைந்துள்ளனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

காணொலி வழியாக மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் சிகிச்சை பற்றி மக்கள் ஆலோசனை பெற்று வரும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தால் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 13ஆம் தேதி இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். உரிய பயிற்சிக்கு பின்பு 617 அரசு மருத்துவர்களை கொண்டு இந்த சேவை வழங்கி வருகிறது என்றார். இந்தியாவில் அதிக மருத்துவர்களை கொண்டும், […]

Continue reading …

மும்பையில் கொரோனாவுக்கு எதிரான போரை வென்ற 101 வயது முதியவர்!

Comments Off on மும்பையில் கொரோனாவுக்கு எதிரான போரை வென்ற 101 வயது முதியவர்!

மும்பை மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 101 வயது முதியவர், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்றால் பெரும்பாலும் வயது முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக நாடுகள் தெரிவிக்கிறது. இருந்தாலும் 90 வயது மற்றும் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாந்தா பாய் என்கிற 100 […]

Continue reading …

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய். 901 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Comments Off on தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய். 901 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் படி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய்.901 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை பற்றி அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டது: 15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஜல் சக்தி அமைச்சின் அடுத்தடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் ரூ .15,187.5 கோடி தொகையை வழங்குவதற்காக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தவணை மானியங்களை இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற உள்ளாட்சி […]

Continue reading …