சயினத் துறவியான விஜய் வல்லப் சுரீஷ்வஜி மகாராஜ், எளிய வாழ்கையை வாழ்ந்து, மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றியவர் வாழ்ந்தவர். அவருடைய ஊக்குவிப்பால் பள்ளி கல்லூரிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-ம் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், பாலியில் அமைதிக்கான சிலை’ என்று அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலும், ஜைனாச்சார்யா விஜய் வல்லப்பும் நாட்டிற்கு சேவை ஆற்ற தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தனர், இரு தலைவர்களின் சிலைகளையும் திறப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, எனத்ய் அதிர்ஷ்டம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.