வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை பற்றி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 14ஆம் தேதி காலை 10மணிக்கு கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் கூட்டத் தொடர் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …இந்தியா-சீனா இடையே கால்வன் மோதலில் சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததற்கு ஆதாரமாக அவர்களின் கல்லறை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய – சீனா பாதுகாப்பு படையினர் இடையே உருவான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை அடுத்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை இந்தியா வெளியிட்டது. ஆனால், சீனா உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை. இதில் 35க்கும் […]
Continue reading …இதை பற்றி நடிகர் செய்தி குறிப்பில், அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம், கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர் ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமபடும் நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், திரைத்துறையினர், ‘கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 91 பேர் பலியாகியுள்ளனர், 6,008 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,28,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,322 பேர் பலியாகியுள்ளனர், 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Continue reading …முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை அண்மையில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் என அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் பொழுது தான் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று பொறுப்புக்கு […]
Continue reading …பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீரை திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி அவரின் அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வைத்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களை காக்கவும், குடிநீர் […]
Continue reading …இந்தியா முழுவதும் கொரோனா பரவல் இன்னும் அடங்காத நிலையில் தான் உள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் அமிதாப்பச்சன் குடும்ப உறுப்பினர்கள், இயக்குனர் ராஜமவுலியின் குடும்ப உறுப்பினர்கள் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகை நிக்கி கல்ராணி உள்பட பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழில் […]
Continue reading …வந்தே பாரத் திட்டதால் விமானம் மூலம், வெளிநாட்டில் இருந்து இதுவரை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் மீட்டு வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி கொண்ட இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை, மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து […]
Continue reading …இறுதி செமஸ்டர் தேர்வின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. இதனால் தேர்வுகளை விரைவில் நடத்துவதற்கு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தினதோறும் அதிகரித்து வரும் நிலையில், தேர்வை ஆன்லைனில் நடத்தலாமா என்பது பற்றி உயர்கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்கள் ஆகியோரின் பேசிய பின்பு இதை பற்றி அரசு அறிவிக்கும் என அமைச்சர் […]
Continue reading …