Home » Archives by category » சென்னை (Page 61)

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 1,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தமிழகத்தில் 65 பேர் பலியாகியுள்ளனர். அதில் சென்னையில் 39 பேர் பலியாகி உள்ளனர். பின்னர் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,18,594 பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் சென்னையில் 71,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,636 பேர் பலியாகி உள்ளனர், 71,116 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Continue reading …

கொரோனா வைரசால் மேலும் ஒரு காவலர் பலி – துக்கத்தில் காவலர்கள்!

Comments Off on கொரோனா வைரசால் மேலும் ஒரு காவலர் பலி – துக்கத்தில் காவலர்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியாகியுள்ளார். மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜ். இவர் சென்னையிலுள்ள வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சிகிச்சை பலனில்லாமல் பலியாகியுள்ளார். இந்த […]

Continue reading …

சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்!

Comments Off on சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்!

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளும் மற்றும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை குறைப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் ஒளிவு இல்லாமல் தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகமாக செய்தாலும், பாதிப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள். மீதி இருக்கும் 35 சதவீதம் பேரும் […]

Continue reading …

தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!

Comments Off on தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!
தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!

கோவை, ஜூலை 3 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், என்று ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது நீண்ட காலம் ஆகலாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் கொடுக்க முடியாமல் அந்தந்த பள்ளி நிர்வாகம் திக்குமுக்காடி கொண்டு […]

Continue reading …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

Comments Off on பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !
பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]

Continue reading …

கொரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவலர்கள்!

Comments Off on கொரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவலர்கள்!

சென்னை சூளைமேடை சேர்ந்தவர் மணிமாறன். இவர் சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது உடல் நிலையில் மோசமானதால் சென்ற மாதம் 11ஆம் தேதி குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துத்தனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார். மேலும், பட்டினப்பாக்கத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் […]

Continue reading …

சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது – நடிகர் ரஜினி கடும் கோபம்!

Comments Off on சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது – நடிகர் ரஜினி கடும் கோபம்!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்துக்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கு சமயத்தில் அதிக நேரம் கடை தீர்க்கப்பட்டதால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதை பற்றி நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்: அந்த பதிவில் அவர் கூறியது: தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த […]

Continue reading …

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

Comments Off on பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை !

கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் […]

Continue reading …

மூன்றாவது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

Comments Off on மூன்றாவது திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி செய்து கொண்ட வனிதா விஜயகுமார்!

1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட வனிதா அவர்களுடன் எற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்து பெற்று கொண்டார். இவருடைய தந்தையான விஜயகுமாருடன் சண்டை ஏற்பட்டதால் இரண்டு மகளுடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது பீட்டர் பால் என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனரை நேற்று கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சென்னை போரூரில் உள்ள வனிதா […]

Continue reading …

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியின் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!

Comments Off on கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியின் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தனியார் டிவியான ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவருக்கு கடந்த 15 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரு நாட்களாக அவருடைய உடல் நிலையில் மோசமானதால் சிகிச்சை பலனின்றி இன்று காலைகாலமானார். இவருடைய மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தங்களுடைய இரங்கலை […]

Continue reading …