
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மேலும், இரண்டு தீவிரவாதிகளை சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள். இதனால் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு. நேற்று மாலை பந்தா சோவ்க் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவலர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், திவரவாதிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் பின்பு இன்று அதிகாலை மேலும் இரண்டு திவரவாதிகள் மடிந்தனர். இந்த மோதலில் காவலர் பாபு ராம் படுகாயம் […]
Continue reading …
பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டம் துவங்கி ஆறு வருடங்கள் முடிந்ததற்கு பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தால் பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அடித்தளமான பயனாளிகள் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டதன் மூலம் பெண்களுக்கு பயன் அளிப்பதாகும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு சிறப்பாக உழைத்தவர்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Continue reading …
பாலிவுட் சுஷாந்த் சிங் ராஜ்புதை அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதை பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அளித்து கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனால் சுஷாந்தின் மரண வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரியாவையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ […]
Continue reading …
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நீட், ஜே.இ.இ தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்வதாகும் என 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணத்தினால் நீட், ஜே.இ.இ தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், அரசியல் லாபத்தை அதிகமாக்கி கொள்ள பலரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர். இளைஞர்களும், மாணவர்களும் நம் நாட்டின் எதிர்காலம். இதனால் முன்பே அறிவித்தபடி நீட், ஜே.இ.இ தேர்வுகளை மத்திய […]
Continue reading …
ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்து அவருடைய பதிவில்; எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Continue reading …
தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. அண்ணாமலை ஒன்பது ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அதிகாரியாக பல இடங்களில் வேலை பார்த்தவர். இதை அடுத்து அரசியல் காலத்திலும் அவருடைய பணியை துவங்க இருக்கிறார்.
Continue reading …
கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னர் இருந்த நிலைமையை கொண்டுவர சீனாவின் படைகளை பின்வாங்குமாறு இந்தியா வலியுறுத்தியது. இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுக்களிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை சீனா மறுத்து வருகிறது. சீனா படைகள் பின்வாங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.
Continue reading …
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வளர்க்கும் தேசிய பறவையான மயில்களுக்கு உணவு வைக்கும் வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 1.47 நிமிடங்கள் கொண்ட வீடியோ கண்களை கவர்கிறது. அந்த வீடியோவில் காலை உடற்பயிற்சி செய்யும் போது அவரின் வீட்டில் மயில்களுக்கு உணவு வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது. அந்த வீடியோ உடன் இந்தியில் ஒரு கவிதையும் பகிர்ந்துள்ளார்.
Continue reading …
இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநிலங்களில் கொரோனா காரணத்தினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் ஆகிய விஷயங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி அவரின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்; கணேஷ் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். […]
Continue reading …
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 29, 75, 702பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 55,794 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22,22, 588 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 74.30 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6, 97,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63, 631 குணமடைந்துள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 835 […]
Continue reading …