Home » Archives by category » இந்தியா (Page 143)

#BREAKING: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

Comments Off on #BREAKING: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue reading …

வந்தே பாரத் திட்டதால் இதுவரை வெளிநாட்டில் இருந்து 3.86 லட்சம் பேர் மீட்பு!

Comments Off on வந்தே பாரத் திட்டதால் இதுவரை வெளிநாட்டில் இருந்து 3.86 லட்சம் பேர் மீட்பு!

வந்தே பாரத் திட்டதால் விமானம் மூலம், வெளிநாட்டில் இருந்து இதுவரை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் மீட்டு வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி கொண்ட இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை, மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து […]

Continue reading …

ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்!

Comments Off on ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மேலும், இரண்டு தீவிரவாதிகளை சுட்டு கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்கள். இதனால் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு. நேற்று மாலை பந்தா சோவ்க் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவலர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், திவரவாதிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் பின்பு இன்று அதிகாலை மேலும் இரண்டு திவரவாதிகள் மடிந்தனர். இந்த மோதலில் காவலர் பாபு ராம் படுகாயம் […]

Continue reading …

ஆறு வருடங்கள் முடிந்த அனைவருக்கும் வங்கிக்கணக்கு – பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ட்வீட்!

Comments Off on ஆறு வருடங்கள் முடிந்த அனைவருக்கும் வங்கிக்கணக்கு – பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ட்வீட்!

பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டம் துவங்கி ஆறு வருடங்கள் முடிந்ததற்கு பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தால் பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அடித்தளமான பயனாளிகள் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டதன் மூலம் பெண்களுக்கு பயன் அளிப்பதாகும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு சிறப்பாக உழைத்தவர்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Continue reading …

சுசாந்துக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் – சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டு!

Comments Off on சுசாந்துக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் – சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டு!

பாலிவுட் சுஷாந்த் சிங் ராஜ்புதை அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இதை பற்றி அவர் வெளியிட்ட வீடியோவில், என்னுடைய மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அளித்து கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இதனால் சுஷாந்தின் மரண வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரியாவையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ […]

Continue reading …

நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

Comments Off on நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நீட், ஜே.இ.இ தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்வதாகும் என 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் காரணத்தினால் நீட், ஜே.இ.இ தேர்வுகளை அடுத்த மாதத்தில் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை குறிப்பிட்டுள்ள கல்வியாளர்கள், அரசியல் லாபத்தை அதிகமாக்கி கொள்ள பலரும் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர். இளைஞர்களும், மாணவர்களும் நம் நாட்டின் எதிர்காலம். இதனால் முன்பே அறிவித்தபடி நீட், ஜே.இ.இ தேர்வுகளை மத்திய […]

Continue reading …

ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கொரோனா தொற்றால் உறுதி!

Comments Off on ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கொரோனா தொற்றால் உறுதி!

ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்து அவருடைய பதிவில்; எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Continue reading …

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார்!

Comments Off on முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைகிறார்!

தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. அண்ணாமலை ஒன்பது ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அதிகாரியாக பல இடங்களில் வேலை பார்த்தவர். இதை அடுத்து அரசியல் காலத்திலும் அவருடைய பணியை துவங்க இருக்கிறார்.

Continue reading …

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு!

Comments Off on கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இருந்து பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு!

கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னர் இருந்த நிலைமையை கொண்டுவர சீனாவின் படைகளை பின்வாங்குமாறு இந்தியா வலியுறுத்தியது. இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுக்களிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை சீனா மறுத்து வருகிறது. சீனா படைகள் பின்வாங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.

Continue reading …

தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!

Comments Off on தேசிய பறவையான மயில்களுக்கு உணவளிக்கும் அன்பை விடியோ மூலம் வெளிட்ட பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வளர்க்கும் தேசிய பறவையான மயில்களுக்கு உணவு வைக்கும் வீடியோவை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 1.47 நிமிடங்கள் கொண்ட வீடியோ கண்களை கவர்கிறது. அந்த வீடியோவில் காலை உடற்பயிற்சி செய்யும் போது அவரின் வீட்டில் மயில்களுக்கு உணவு வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது. அந்த வீடியோ உடன் இந்தியில் ஒரு கவிதையும் பகிர்ந்துள்ளார்.

Continue reading …